கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் கழகத்தின் "உற்பத்தித்திறன் வார விழா- 2017" தொடக்கம்

கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் கழகம் சார்பில் 59-ஆம் ஆண்டிற்கான "உற்பத்தித்திறன் வார விழா- 2017" ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் கழகம் கவுன்சில் ஹாலில் இன்று காலை நடைபெற்றது.

12ம் தேதி (இன்று) முதல் 18ம் தேதி வரை நடைபெறும் இந்த உற்பத்தித்திறன் வார விழாவினை கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் சின்னராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடக்கி வைத்தார்.



விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் கழகத் தலைவர் கவிதாசன் வரவேற்றார். கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் கழகம் துணைத் தலைவர் வேலுமணி நஞ்சப்பன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.

கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் கழகம் துணை செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் சின்னராஜு பேசுகையில், 59-வது ஆண்டின் உற்பத்தித்திறன் வார விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும், அடுத்த ஆண்டில் கோவை உற்பத்தித்திறன் கழகத்தின் 60-வது வைர விழா விரைவில் கொண்டாட உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 



மேலும், இந்த ஆண்டின் உற்பத்தித்திறன் வார விழாவின் முக்கிய கருவாக "சேதாரத்தில் இருந்து ஆதாயம்" என்னும் தலைப்பில் குப்பையினை குறைத்தல், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு போன்றவை முக்கிய கருவாக கொண்டுள்ளது. இதன் மூலம் கோவை குப்பை இல்லா நகரமாகவும் மாற்றுவதே இலக்கு என்றார். விழாவின் இறுதியில் கோயமுத்தூர் உற்பத்தித்திறன் கழகச் செயலாளர் நடராஜன் நன்றியுரை கூறினார்.



அதனைத் தொடர்ந்து, "சேதாரத்தில் இருந்து ஆதாயம்" என்னும் குப்பையினை குறைத்தல், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான வரைதல் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

இதில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் என இரண்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...